காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து தகவல் முன்கூட்டியே கசியவில்லை – மத்திய அரசு மறுப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து தகவல் முன்கூட்டியே கசியவில்லை – மத்திய அரசு மறுப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து தகவல் முன்கூட்டியே கசியவில்லை, யாருக்கும் தெரியாது என மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

புதுடெல்லி:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு அதே நாளில் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட்டது.

இந்தநிலையில், நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, ‘‘370-வது பிரிவு ரத்து பற்றி நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பே ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட பொது பிரபலங்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறப்படுவது உண்மையா?’’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி பதில் அளிக்கையில், ‘‘இந்த தகவல் முன்கூட்டியே கசியவில்லை. யாருக்கும் தெரியாது’’ என்று கூறினார்.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan