இந்தியாவில் இதுவரை 68 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 68 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 68 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கிய இந்த திட்டம் மூலம் தடுப்பூசி பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நேற்று மாலை 6 மணி வரை 68 லட்சத்து 26 ஆயிரத்து 898 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதில் 56,65,172 பேர் சுகாதார பணியாளர்கள் (57.4 சதவீதம்) மற்றும் 11,61,726 பேர் முன்கள வீரர்கள் (13.2 சதவீதம்) ஆவர்.

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட சுகாதார பணியாளர்களில் 65 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 7 மாநிலங்களில் 40 சதவீதத்துக்கும் குறைவான நபர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் இதுவரை 30 பேர் பக்க விளைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan