தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் நேற்று 618 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 63 ஆயிரம் சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 7 ஆயிரத்து 727 சுகாதாரப்பணியாளர் மற்றும் 3 ஆயிரத்து 941 முன்கள பணியாளர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 768 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 133 சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் 14 முன்கள பணியாளர் என மொத்தம் 147 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என நேற்று மொத்தம் 11 ஆயிரத்து 815 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan