நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை:

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 13-ந் தேதி சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி வருகிற மே மாதம் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால வரவு செலவுத் திட்டம்தான் வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும்.

சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது தாக்கல் செய்யப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என தெரிகிறது.

இந்த 6 மாத கால இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது.

இந்த கூட்டத்தில் வரவு செலவுத் திட்டம்டுக்கு இறுதி வடிவமும் கொடுக்கப்பட உள்ளது. அநேகமாக 22-ந் தேதிக்குபிறகு சட்டசபை வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan