‘எமதர்மன்’ வேடமணிந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட போலீஸ் அதிகாரி

‘எமதர்மன்’ வேடமணிந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட போலீஸ் அதிகாரி

மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் எமதர்மன் வேடம் அணிந்து வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சம்பவம் நடந்தது.

இந்தூர்:

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு முதல்கட்டமாக தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் 16-ந் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் காவல் துறை அதிகாரி ஒருவர் நேற்று எமதர்மராஜா வேடமணிந்து மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் நான் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வந்து உள்ளேன் என்று கூறி தடுப்பூசி செலுத்தி கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும். மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு வந்தேன்” என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan