நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவமனையில் அனுமதி

நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவமனையில் அனுமதி

நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

போதைப் பொருள் வழக்கில் கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி கைதாகி இருந்தார். அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு பிணை கேட்டு கர்நாடக உயர்நீதிநீதி மன்றத்தில் சஞ்சனா மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, சஞ்சனாவுக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது போன்று ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். மேலும் நான் குணம் அடைந்து வருகிறேன். வலிமையாக மீண்டு வருவேன் என்றும் பதிவிட்டுள்ளார். ஆனால் எதற்காக சஞ்சனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரியவில்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan