அரசு விழாவில் பங்கேற்க சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி

அரசு விழாவில் பங்கேற்க சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி

சென்னை மெட்ரோ தொடர் வண்டி விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுள்ளார் பிரதமர் மோடி.

சென்னை:

சென்னை மெட்ரோ தொடர் வண்டி விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வர உள்ளார்.

இதற்காக அவர் இன்று காலை 8 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுள்ளார்.

காலை 10.30 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு ஆளுநர் , முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan