சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளை முதல் ரூபாய் 50 உயர்வதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நாளை நள்ளிரவு முதல் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 50 ஆக  உயர்த்தப்பட்டு 769 ரூபாய் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயரும் என்றே கூறப்படுகிறது.
அதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட நாட்டின் மற்ற பெருநகரங்களிலும் நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள விலையில் கூடுதலாக நாளை முதல் ரூ.50 ஆக உயரலாம் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. அதன்படி சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.735 ஆக இந்த மாத தொடக்கத்தில் உயர்ந்தது. நாளை 50 ரூபாய் உயர்ந்தால் 785 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட வாய்ப்புள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan