தமிழகத்தில் இருந்து ஜெருசலேமுக்கு இனி 1000 பேர் செல்லலாம்- முதலமைச்சர்

தமிழகத்தில் இருந்து ஜெருசலேமுக்கு இனி 1000 பேர் செல்லலாம்- முதலமைச்சர்

தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1,000 பேர் செல்லலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை:

கோவையில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1,000 பேர் செல்லலாம்.

* தமிழகத்தில் இருந்து 600 பேர் வரை சென்றுவந்த நிலையில் இனி 1,000 ஆக உயர்த்தப்படும்.

* அவரவர் மதம் அவரவருக்கு பெரியது. மற்ற மதத்தை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

* தமிழக கல்வித்தரம் உயர்வுக்கு கிறிஸ்தவ பள்ளிகள் முக்கிய காரணம்.

* தேர்தலில் கூட்டணி மாறும், ஆனால் கொள்கைகள் மாறாது.

* சிறுபான்மை மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan