அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் கணினிமய மூலம் பணமோசடி – 3 பேர் கைது

அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் கணினிமய மூலம் பணமோசடி – 3 பேர் கைது

அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் கணினிமய மூலம் பணமோசடி செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

புதுடெல்லி:

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக கணினிமய விற்பனை தளத்தில் விளம்பரம் செய்திருந்தார். இதை பார்த்து ஹர்சிதாவை தொடர்பு கொண்டு பேசிய ஆசாமி ஒருவர் அந்த சோபாவை வாங்க விருப்பம் தெரிவித்ததுடன், ஹர்ஷிதாவின் வங்கி கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையை பெறுவதற்காக சிறிய தொகையை செலுத்தியுள்ளார். பின்னர் ‘கியூ ஆர்’ கோடு லிங்கை அனுப்பி வைத்து, அதன் மூலம் ஹர்ஷிதாவின் வங்கி் கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக ரூ.20 ஆயிரம் மற்றும் 14 ஆயிரம் என ரூ.34 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹர்சிதா டெல்லி காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஹர்சிதா வங்கி கணக்கில் சுருட்டியது அரியானாவை சேர்ந்த சஜித் (வயது 26), உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த கபில் (18) மற்றும் மன்வீந்திர் சிங் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், இந்த மோசடியில் முக்கிய குற்றவாளி வாரிஸ் (25) என்பவர் என்பது தெரியவந்தது. காவல் துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan