அஜ்மீர் தர்கா 809-ம் ஆண்டு உருஸ் விழா – சால்வை சமர்ப்பித்த பிரதமர் மோடி

அஜ்மீர் தர்கா 809-ம் ஆண்டு உருஸ் விழா – சால்வை சமர்ப்பித்த பிரதமர் மோடி

அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுத்தீன் சிஸ்தி தர்கா உருஸ் திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சால்வை சமர்ப்பித்தார்.

புதுடெல்லி:

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது.
 
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் எனவும் அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் 809-வது ‘உருஸ்’ கொண்டாட்டங்கள் தற்போது அஜ்மீர் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த உருஸ் விழாவின்போது அவரது நினைவிடத்தின்மீது மலர்ப்போர்வைகளையும், சால்வைகளையும் அணிவித்து, மகிழும் மரபினை இங்குள்ள முஸ்லிம்களுடன், இந்து மக்களும் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி  சால்வையை காணிக்கையாக வழங்கினார். பிரதமர் மோடி வழங்கிய சால்வையை முக்தார் அப்பாஸ் நக்வி தர்கா நிர்வாகத்தினரிடம் இன்று ஒப்படைக்க உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan