ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை ஜூன் மாதம் பரிசோதனை

ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை ஜூன் மாதம் பரிசோதனை

ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை ஜூன் மாதம் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

புதுடெல்லி:

ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று எதிரி நாடுகளின் விமானங்களை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட அஸ்திரா ஏவுகணை, வரும் ஜூன் மாதத்திற்கு பின் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விமானத்தில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணையின் தாக்குதல் தொலைவு 100 கிலோ மீட்டரில் இருந்து 160 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோதனைகள் முடிந்து அடுத்த ஆண்டு ராணுவத்தில்  இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படை சார்பில் 288 அஸ்திரா ஏவுகணைக்கு வாங்குதல் கொடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யும் ஏவுகணைகளுக்கு மாற்றாக இது இருக்கும். இரவு, பகல் மற்றும் அனைத்துக் காலநிலைகளிலும் இந்த ஏவுகணையைப் பயன்படுத்த முடியும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan