பட்டாசு ஆலை வெடிவிபத்து- ஆலை உரிமையாளர் கைது

பட்டாசு ஆலை வெடிவிபத்து- ஆலை உரிமையாளர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சாத்தூர்:

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் 20 போ் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரியை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஏற்கனவே பட்டாசு ஆலை குத்தகைதாரர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆலை உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan