ஹாரி, மேகன் தம்பதி அரச குடும்பத்துக்கு திரும்புவார்களா? – பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்

ஹாரி, மேகன் தம்பதி அரச குடும்பத்துக்கு திரும்புவார்களா? – பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்

இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்ப மாட்டார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

லண்டன்:

உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் விலகினர்.‌

இதனை ஏற்றுக்கொண்ட அரச குடும்பம் ஓராண்டுக்குப் பிறகு நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் என அறிவித்தது.

ஹாரி மேகன் தம்பதி தற்போது தங்களது ஒன்றரை வயது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இதற்கிடையே, மேகன் இரண்டாவது முறையாக ‌கர்ப்பமாகி இருக்கிறார்.

இந்நிலையில், இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்ப மாட்டார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இளவரசர் ஹாரி தனது கவுரவ ராணுவ பட்டங்களை கைவிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan