தரையிறங்கும்போது மின்கம்பத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்

தரையிறங்கும்போது மின்கம்பத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்

ஆந்திர மாநிலத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் தரையிறங்கும்போது மின் கம்பத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயவாடா:

தோகாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானம் இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியது. தரையிறங்குவதற்கான சிக்னல் கிடைத்ததும் விமானம் ஓடுபாதையில் இறங்கியது. 

அப்போது சற்றும் எதிர்பார்க்காத வகையில், விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தின் ஓரமாக சென்றது. இதனால் ஓடுபாதையின் ஓரத்தின் உள்ள மின்கம்பத்தில், விமானத்தின் இறக்கை மோதியது. இதில், இறக்கை பாதிப்படைந்தது. மின்கம்பமும் சாய்ந்தது. எனினும் சுதாரித்த விமானி, விமானத்தை அதே இடத்தில் நிறுத்தினார். இதனையடுத்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan