கல்லெண்ணெய், டீசல் மீதான வரியில் ஒரு ரூபாய் குறைத்தது மேற்கு வங்காள அரசு

கல்லெண்ணெய், டீசல் மீதான வரியில் ஒரு ரூபாய் குறைத்தது மேற்கு வங்காள அரசு

கல்லெண்ணெய் மற்றும் டீசல் மீதான வரியில் லிட்டருக்கு ஒரு ரூபாயை குறைத்து மேற்கு வங்காள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொல்கத்தா:

கடந்த இரண்டு வார காலமாக கல்லெண்ணெய் மற்றும் டீசல் விலை தொடர் விலை ஏற்றத்தில் உள்ளது. கல்லெண்ணெய், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, கல்லெண்ணெய், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கல்லெண்ணெய் மற்றும் டீசல் மீதான வரியில் லிட்டருக்கு ஒரு ரூபாயை குறைத்து மேற்கு வங்காள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்காள நிதி மந்திரி அமித் மித்ரா கூறுகையில், மத்திய அரசானது கல்லெண்ணெய் விற்பனையில் லிட்டருக்கு ரூ.32.90 ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.31.80 ம் வருவாயாகப் பெறுகிறது. ஆனால் மாநில அரசோ கல்லெண்ணெய் மற்றும் டீசலுக்கு முறையே ரூ.18.46 மற்றும் ரூ.12.77 மட்டுமே வருவாயாகப் பெறுகிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கையானது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிறிய ஆறுதலாக இருக்கும் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan