காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அழிப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அழிப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்:

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே காஷ்மீர் காவல் துறையினர், ராணுவ வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு நேற்று முன்தினம் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 2 பதுங்கு குழிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் இருந்து 3 ஏ.கே.56 ரக துப்பாக்கிகளும், 4 சீன தயாரிப்பு துப்பாக்கிகளும், 4 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.

மேலும் காஷ்மீரின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்புப் பணிகளை அதிகரிப்பதற்கும், உயரமான கட்டிடங்களில் துப்பாக்கி சுடும் வீரர்கள், நிரந்தர பதுங்கு குழிகளை இடமாற்றம் செய்வதற்கும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan