கல்லெண்ணெய்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை- முதல்-அமைச்சருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள்

கல்லெண்ணெய்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை- முதல்-அமைச்சருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் கல்லெண்ணெய்-டீசல் விலையை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கல்லெண்ணெய்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனுடைய விலை உயரும்போது விலைவாசி உயர்கிறது. மக்களை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் பஸ் கட்டணம், உணவுப்பொருட்கள் விலை, காய்கறி-மளிகை பொருட்கள் விலை கூடும். எனவேதான் கல்லெண்ணெய்-டீசல் விலை உயர்வைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசு வரியைக் குறைத்து, லிட்டருக்கு ரூ.5 கல்லெண்ணெய், டீசல் விலையைக் குறைத்திருக்கிறது. அந்த கட்சியுடன் கூட்டணியாக இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கல்லெண்ணெய்- டீசல் விலையைக் குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இதேபோல் கல்லெண்ணெய் விலை முன்பு உயர்ந்தபோது, 2018-ம் ஆண்டில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் வரியைக் குறைத்தார். அதன்மூலம் கல்லெண்ணெய்-டீசல் விலையையும் குறைத்தார். தற்போது மேற்கு வங்காள அரசும் வரியைக் குறைத்துள்ளது. ஆகவே எடப்பாடி பழனிசாமியும் கொரோனா காலத்தில் அவரே உயர்த்திய வரியையாவது இப்போது குறைத்து, கல்லெண்ணெய்-டீசல் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan