Press "Enter" to skip to content

தாம்பரம் அருகே தண்டவாளத்தில் விரிசல் – வெளியூரில் இருந்து வரும் தொடர் வண்டிகள் தாமதம்

இரும்புலியூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வெளியூரில் இருந்து சென்னை வரும் தொடர் வண்டிகள் தாமதமானது.

சென்னை:

தாம்பரம் அருகே இரும்புலியூரில் இன்று அதிகாலை காலை 4.45 மணியளவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தண்டவாள விரிசலைதொடர்வண்டித் துறை அதிகாரிகள் உரிய நேரத்தில் கண்டுபிடித்தனர். இதனால் வெளியூரில் இருந்து சென்னை வரும் தொடர் வண்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

அதன்பின், தண்டவாள விரிசலைதொடர்வண்டித் துறை அதிகாரிகள் 5.25 மணியளவில் சரிசெய்தனர். இதையடுத்து, வெளியூரில் இருந்து சென்னை வரும் தொடர் வண்டிகள் மீண்டும் இயக்கப்பட்டன. மேலும், சில தொடர் வண்டிகள் மாற்று தண்டவாளம் வழியாக இயக்கப்பட்டன. இதனால் வெளியூரில் இருந்து சென்னை வரும் தொடர் வண்டிகள் காலதாமதமாக வந்தன.   

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »