Press "Enter" to skip to content

பூண்டி ஏரியில் இருந்து இன்று பிற்பகல் உபரி நீர் திறப்பு -வெள்ள அபாய எச்சரிக்கை

உபரி நீர் திறக்கப்படுவதால், கொசஸ்தலை பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய 5 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 33.95 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உபரி நீர் படிப்படியாக திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. 

“பூண்டி ஏரியில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஏரி நீர் செல்லும் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும்” என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »