Press "Enter" to skip to content

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகதத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் வரும் 28-ம் தேதி வரை பெரும் அடைமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது.

இதன் எதிரொலியால், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்.. தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்- சசிகலா அறிக்கை

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar