Press "Enter" to skip to content

தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அடைமழை (கனமழை) காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை:

குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அடைமழை (கனமழை) நீடிப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடைமழை (கனமழை) காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar