Press "Enter" to skip to content

இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கு வழங்கி வருகிறது.

இதன்படி பூடான், மாலத்தீவு நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரீசியஸ், சீஷெல்ஸ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்து வருகிறது.

இதற்கிடையே, இந்தியா நல்லெண்ண அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஒரு மில்லியன் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை அனுப்பி வைக்க உள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இன்று முதல் தவணையாக 5 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இங்கிருந்து ஈரானின் மஹான் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மருந்து காபூல் சென்றடைந்தது. 

மேலும், அடுத்த தவணையான 5 லட்சம் தடுப்பூசி ஜனவரி 2-வது வாரத்தில் அனுப்பி வைக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை டுவிட்டரில் பதவிட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar