ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் தூதராக நடிகை கங்கனா ரணாவத்தை உத்தரப்பிரதேச அரசு நியமித்திருந்தது.
லக்னோ:
தேசிய அளவில் அதிரடி அரசியல் கருத்துகளை தெரிவித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மகராஜ் யோகி ஆதித்யநாத் மகத்தான வெற்றி பெற்ற பிறகு அவரைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
இது ஒரு அற்புதமான மாலை. மகாராஜ்-ன் கருணை, அக்கறை மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவை என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்துவதில் இருந்து நிறுத்தவில்லை. நான் கௌரவமாகவும், ஊக்கமாகவும் உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த யோகி அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் கைவினைப்பொருட்களுக்கு ஊக்கமளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாவத் இருப்பார் என கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar