Press "Enter" to skip to content

பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர்- சுட்டுக்கொன்ற காவல் துறையினர்

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 11 பேர் இறந்தனர்.

ஒட்டாவா:

கடந்த மே 25-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தி 19 சிறுவர்கள் உள்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு தணிவதற்குள் கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 3 தொடக்கப்பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. பின் காவல் துறை அதிகாரிகள் உடனடியாக அந்த இடைத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கியுடன் நடமாடிய நபரை சுற்றிவளைத்தனர். 

பின்னர் காவல் துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »