Press "Enter" to skip to content

100+ நாடுகள், 10 லட்சம் அனுமதிச்சீட்டுகள் விற்பனை – மக்கள் விரும்பத்தக்கது காட்டும் ஷாருக்கானின் ‘பதான்’

ஷாருக்கான் நடிப்பில் புதன்கிழமை வெளியாகும் ‘பதான்’ இந்தியப் படங்களிலேயே அதிக திரைகளிலும், நாடுகளிலும் திரையிடப்படும் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். அதற்காக நடிகர் விஜய்க்கு, ஷாருக்கான் நன்றியும் தெரிவித்திருந்தார். இவை பதான் சிறப்பு தகவல்கள்:

  • 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம்.
  • புக் மை ஷோவில் முன்பதிவில் 10 லட்சத்துக்கும் அதிகமான அனுமதிச்சீட்டு விற்பனை நடந்துள்ளது.
  • பிவிஆர், ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேற்று வரை படம் 4.19 லட்சம் அனுமதிச்சீட்டுகளை விற்பனை.
  • இந்திக்கு அடுத்தபடியாக பதானின் தெலுங்கு பதிப்பில் அதிக முன்பதிவு அனுமதிச்சீட்டு விற்பனை நடந்துள்ளது.
  • அனுமதிச்சீட்டு விற்பனையில் 30 சதவீதம் தென்னிந்தியாவில் இருந்து வந்துள்ளது.
  • சைபீரியாவில் உறைந்தஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கால் ஏரியில் பதான் படமாக்கப்பட்டுள்ளது.அங்கு படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் இதுவாகும்.
  • வெளிநாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான திரைகள்; இந்தியாவில் 5000-க்கும் அதிகமான திரைகளில் படம் திரையிடப்படுகிறது.
  • காலை 6 மணி காட்சிகள் கொண்ட முதல் ஷாருக்கான் படம் இது.
  • முதல் நாள் இந்தியாவில் மட்டும் படம் ரூ.45- 50 கோடி வரை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • ஐசிஇ (Immersive Cinema Experience) ஃபார்மெட்டில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம். ஐசிஇ என்பது சிறந்த திரையனுபவத்தைக் கொடுக்கும் தொழில்நுட்ப வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu