Last Updated : 25 Feb, 2023 02:58 PM
Published : 25 Feb 2023 02:58 PM
Last Updated : 25 Feb 2023 02:58 PM

ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு ‘ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன்’ விருது கிடைத்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் – ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடி வசூலை குவித்தது. அண்மையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு..’ பாடலுக்காக ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ’கோல்டன் குளோப்’ விருது கிடைத்தது.
மேலும், ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது’ விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த பாடல் ஆகியவற்றுக்கான விருதுகளை பெற்றது.
இந்நிலையில், தற்போது ‘ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன்’ விருது விழாவில் 4 பிரிவுகளின் கீழ் ‘ஆர்ஆர்ஆர்’ படம் விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்ற விருது விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த சண்டைக் காட்சி மற்றும் சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வாங்கிக் குவித்துள்ளது.
தவறவிடாதீர்!
Source: Hindu