கேரளாவில் வயது வந்தோருக்கான வெப் தொடர்களை இயக்கி வருபவர் லட்சுமி தீப்தா. இதற்கான ஓடிடி தளத்தில் இந்தப் படங்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் லட்சுமி தீப்தா மீது வெங்கானூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் அருவிக்கரை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதில், திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைப்பதாகக் கூறி, லட்சுமி தீப்தா ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார். படப்பிடிப்பு தொடங்கியபோதுதான் அது ஆபாசத் திரைப்படம் என்று தெரிந்தது. இதனால், நடிக்க மறுத்தேன். அவர் ஒப்பந்தத்தைக் காட்டி மிரட்டினார். பாதியில் சென்றால் இழப்பீடு தரவேண்டும் என்றதால் வேறு வழியின்றி நடித்ததாகக் கூறியிருந்தார்.
விசாரித்த காவல் துறையினர் லட்சுமி தீப்தாவை கைது செய்து, நெடுமங்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
Source: Hindu