“விலங்கு 2’ இணையத் தொடரின் இரண்டாவது பருவம் தொடங்க உள்ளது; தொடர்ந்து பல்வேறு முக்கியமான படங்களில் நடித்து வருகிறேன்” என்று நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் விமல் குடும்பத்துடன் சுவாமி பார்வை செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனத்திற்காக குடும்பத்துடன் வந்துள்ளேன். ‘மா.பொ.சி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறேன். மைக்கேல் என்ற இயக்குநரிடம் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறேன். ‘கலகலப்பு’, ‘தேசிங்கு ராஜா’ வரிசையிலான நகைச்சுவை படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன்.
அடுத்து ‘விலங்கு’ தொடரின் இரண்டாவது பருவம் ஆரம்பிக்க இருக்கிறது. இறைவன் அருளால் நல்ல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறேன். ‘விலங்கு’ இணையத் தொடருக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்த கன்டென்ட் உள்ள படங்களை தேடித் தேடி நடிக்கிறேன்.‘மா.பொ.சி’ 80-களில் நடக்கும் கதை. அதற்கேற்ற காஸ்டியூமில், ஹேர்ஸ்டைலில் வித்தியாசமாக உருவாகும் இப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்.
இயக்குநர் மைக்கேல் இயக்கும் படத்தில் முதன்முறையாக சென்னை வட்டார வழக்கை பேசி நடித்திருக்கிறேன். அந்தப் படம் மக்களுக்கு பிடிக்கும். ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது இந்திய நாட்டுக்கு கிடைத்த பெருமை. என்னைப் பற்றி பரவும் வதந்திகளை முருகன் பார்த்துக்கொள்வார்” எனத் தெரிவித்தார். | விலங்கு விமர்சனத்தை வாசிக்க: முதல் பார்வை | ‘விலங்கு’ வெப் சீரிஸ் – தமிழில் ஒரு புதிய த்ரில் அனுபவம்!
Source: Hindu