Press "Enter" to skip to content

இந்தியில் அறிமுகமாகிறார் நித்யா மேனன்

தமிழில், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், மெர்சல், திருச்சிற்றம்பலம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வரும் அவர், அக்‌ஷய்குமார் நடித்த ‘மிஷன் மங்கள்’ என்ற இந்திப் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்திப் படம் ஒன்றில் கதாநாயகியாக அவர் அறிமுகமாகிறார். இந்தி இயக்குநர் விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் ‘மர்டர் மிஸ்டரி’ படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார்.

இதில் விவேக் ஓபராய், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். ஆசிஷ் வித்யார்த்தி மூத்த விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது. இதற்காக நித்யா மேனன் அங்கு சென்றுள்ளார். அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »