Press "Enter" to skip to content

மனோஜ் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ அக்டோபர் 5-ல் வெளியீடு

சென்னை: மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதனைத் தொடர்ந்து ‘அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈரநிலம்’, ‘சமுத்திரம்’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகராக இருந்த மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தில் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பட விளம்பரம் அண்மையில் வெளியான நிலையில் தற்போது படம் அக்டோபர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »