Press "Enter" to skip to content

“ஜவான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப ஆசை” – இயக்குநர் அட்லீ பகிர்வு

மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப படத்தின் இயக்குநர் அட்லீ விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அட்லீ, “கண்டிப்பாக. எல்லாம் சரியாக நடந்தால் ‘ஜவான்’ ஆஸ்கருக்கு போகலாம். திரைப்படத்தில் வேலை பார்க்கும் டெக்னிஷியன், இயக்குநர் என ஒவ்வொருவருக்கும் ‘கோல்டன் குளோப்’, ‘ஆஸ்கர்’, ‘தேசிய விருது’களின் மீது விருப்பம் இருக்கும் என நினைக்கிறேன்.

அந்த வகையில் எனக்கும் ‘ஜவான்’ படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இது தொடர்பாக ஷாருக்கானிடம் ‘ஆஸ்கருக்கு படத்தை கொண்டு செல்லலாமா?’ என கேட்கப் போகிறேன்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, ஷாருக்கானும் – விஜய்யும் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 11 நாட்களில் ரூ.858.68 கோடி வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »