Press "Enter" to skip to content

பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் மறைவு

கொச்சி: மூத்த மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார். அவருக்கு வயது 77.

குளக்கட்டில் கீவர்கீஸ் ஜார்ஜ் கேரளாவில் பத்தனம்திட்டாவில் பிறந்தவர். புனே திரைப்படக் கல்லூரியில் டிப்ளமோ முடித்த அவர், இயக்குநர் ராம் கரியத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். 1975ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்வப்னதானம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஜார்ஜ்.

இப்படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. தொடர்ந்து அவர் இயக்கிய ‘ஊழ்க்கடல்’ (1979), ‘மேளா (1980), ‘யவனிகா’ (1982), ’லேகாயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்’ (1983) ஆகிய படம் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றன. இதுவரை 9 கேரள அரசு விருதுகளை ஜார்ஜ் வென்றுள்ளார்.

மேலும் மலையாள திரைப்படம் தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டமைப்பு நிறுவி அதன் தலைவராகவும் இருந்தார் கே.ஜி.ஜார்ஜ். இந்த நிலையில் 77 வயதாகும் ஜார்ஜ், கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (செப்.24) கொச்சியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source: Hindu