Press "Enter" to skip to content

சர்ச்சைக்குரிய வரிகளுடன் வெளியானது ‘நான் ஆயத்தம்’ பாடல் காணொளி!

சென்னை: ’லியோ’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆயத்தம்’ பாடலின் இடம்பெற்ற சில வரிகள் திரையரங்கில் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது யூடியூபில் அந்த வரிகள் நீக்கப்படாமல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆயத்தம்’ பாடலின் லிரிக்கல் காணொளி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் இடம்பெற்ற சில வரிகள் குடிபோதையை ஊக்குவிப்பதாக கூறி சமூக வலைதளங்களில் சர்ச்சை ஆனது. பலரும் இப்பாடல் வரிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து படம் திரையரங்கில் வெளியானபோது இப்பாடலில் இடம்பெற்ற அந்த வரிகள் மாற்றப்பட்டன.

இந்த நிலையில், இப்பாடலை படக்குழு இன்று (நவ.19) யூடியூபில் வெளியிட்டுள்ளது. அதில் திரையரங்கில் நீக்கப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய வரிகள் இடம்பெற்றுள்ளன.

லியோ’ திரைப்படம் இதுவரை ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. விஜய்யின் படங்களில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையுடன், தமிழ் திரைப்படத்தில் அதிகபட்ச வசூலை குவித்த 3-ஆவது படம் என்ற அடையாளத்தையும் ‘லியோ’ பெற்றுள்ளது.

Source: Hindu