Press "Enter" to skip to content

நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானுக்கு பிரபலங்கள் கண்டனம்

சென்னை: நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘லியோ’ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளையும் கூறியிருந்தார். இதற்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார்.

“மிகவும் கேவலமாகவும் அவமரியாதை செய்யும் வகையிலும் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவரைப் போன்ற ஒருவருடன் சேர்ந்து நடிக்காததில் மகிழ்ச்சி. இனிமேலும் நடிக்காமல் பார்த்துக்கொள்வேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்துக்கு அவப்பெயரை உண்டாக்குகிறார்கள்” என்று கூறியிருந்தார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகான் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார். நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில்,மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், “பழைய படங்கள் போல கதாநாயகிகளுடன் நடிக்கும் வாய்ப்பு இதில் (லியோ) இல்லை என்ற ஆதங்கத்தை நகைச்சுவையாக சொன்னேன். அதை மட்டும் ‘கட்’ பண்ணி போட்டு கலகம் பண்ண நினைத்தால் நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சுகிறவனா? த்ரிஷாவிடம் தப்பான காணொளியை காட்டியிருக்கிறார்கள்.

நான் எப்போதும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன் என்று எல்லோருக்கும் தெரியும். த்ரிஷாவிடம் காணொளியை தப்பாக கட் பண்ணி காண்பித்து கோபப்பட வைத்துள்ளனர்”எனக் கூறியுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »