Press "Enter" to skip to content

“நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை” – செல்வராகவன் வேதனை

சென்னை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து இயக்குநர் செல்வராகவன் வேதனையுடன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

உலகக் கோப்பை 2023 ஒருநாள் போட்டித் தொடர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. தொடர் முழுவதும் அட்டகாசமாக ஆடிய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியுற்றது. இந்த தோல்வி இந்தியா முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களை பெரும் கவலை அடையச் செய்துள்ளது. இறுதிப் போட்டியில் வெற்றி நிச்சயம் என்று எதிர்பார்த்திருந்த பலரும் தங்கள் ஏமாற்றத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது: “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »