Press "Enter" to skip to content

ஹாலிவுட் நடிகை சூஸன் ஷெப்பர்ட் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை சூஸன் ஷெப்பர்ட் காலமானார். அவருக்கு வயது 89.

ஹாலிவுட் நடிகை சூஸன் ஷெப்பர்ட், ‘குட் ஃபெல்லாஸ்’, ‘மிஸ்டிக்பீட்ஸா’, அங்கிள் பக், ‘எ டர்ட்டி ஷேம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள அவர் ஹெச்.பி.ஒ சேனலில் ஒளிபரப்பான ‘தி சோப்ரனோஸ்’ தொடர் மூலம் இன்னும் பிரபலமானார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த இவர், மரணமடைந்துவிட்டதாக அவர், பேத்தி இசபெல் தெரிவித்துள்ளார். அவர் இறப்பிற்கான காரணம் தெரிவிக்கப் படவில்லை. ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »