Press "Enter" to skip to content

“ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில்தான் கடந்த வாரம் இருந்தேன்” – இந்தியா திரும்பிய ஜூனியர் என்டிஆர்

ஹைதராபாத்: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று அங்கிருந்து இந்தியா திரும்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: “ஜப்பானிலிருந்து இன்று இந்தியா திரும்பினேன். அங்கு ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்துள்ளேன். கடந்த வாரம் முழுவதும் அங்குதான் இருந்தேன். பாதிக்கப்பட்ட மக்களை நினைத்து வருத்தமாக உள்ளது. மன உறுதிகொண்ட அம்மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம்: ஜப்பானில் புத்தாண்டு தினமான நேற்று (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெற பெறப்பட்டிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சேதங்களைக் கணக்கிட அரசு குழுக்கள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன.

தேவரா: நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்ததாக ‘தேவரா’ படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கொரட்டாலா சிவா இயக்கி வருகிறார். இப்படம் ஏப்ரல் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. ஜான்வி கபூர், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் க்ளிம்ஸ் காணொளி 8-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »