Press "Enter" to skip to content

‘கேப்டன் மில்லர்’ vs ‘அயலான்’ – வசூலில் முந்துவது எது?

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இதன் வசூல் நிலவரம் குறித்த தகவலை பார்ப்போம்.

கேப்டன் மில்லர்: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆலய நுழைவு போராட்டம் பற்றிய கதையை மாஸ் ஆக்ஷனுடன் பேசியிருக்கும் இப்படம் இரண்டு நாட்களில் ரூ.23 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான்: ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதன் எதிரொலியாக படம் 2 நாட்களில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »