Press "Enter" to skip to content

வடக்குப்பட்டி ராமசாமியில் சர்ச்சை காட்சிகளா?: இயக்குநர் விளக்கம்

சந்தானம், மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள படம், ‘வடக்குப்பட்டி ராமசாமி’. ‘டிக்கிலோனா’ படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இதில் நிழல்கள் ரவி, தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா உட்பட பலர் நடித்துள்ளனர். பீப்பிள் ஊடகம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஷான் கதாபாத்திரம்டன் இசை அமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம், பிப்.2-ல் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லரில் பெரியார் குறித்த சர்ச்சை காட்சிகள் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

இதுபற்றி இயக்குநர் கார்த்திக் யோகி கூறும்போது, “இது முழு நகைச்சுவை படம். 1974-ம் ஆண்டு பின்னணியில் ஒரு கற்பனை கிராமத்தில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்து நையாண்டியால் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் ஏற்படும் பிரச்சினை எங்கு போய் முடிகிறது என்பது படம். அதிக நகைச்சுவை நடிகர்கள் இதில்பங்கேற்றுள்ளார்கள். படத்தில் எந்த சர்ச்சைக்காட்சிகளும் இல்லை. யார் மனதும் புண்படும்படியும் காட்சிகள் இருக்காது. படம் பார்க்கும்போது அது புரியும். படத்தை 63 நாளில் எடுத்து முடித்தோம். இது எல்லோருக்குமான படமாக இருக்கும்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »