Press "Enter" to skip to content

உ.பி தேர்தல்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஒன்றாக பிரச்சாரம்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோர் நாளை ஒன்றாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் சமாஜ்வாடி கட்சியானது, தேசிய கட்சியான காங்கிரசுடன் கைகோர்த்து இம்முறை தேர்தலை சந்திக்கிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாடி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான தொகுதி உடன்பாடு சமீபத்தில் முடிவானது.

இந்நிலையில், நாளை லக்னோவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவரும் உத்தரப்பிரதேச முதல்மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஒன்றாக பிரச்சாரம் செய்கின்றனர். பிரச்சாரம் முடிந்த பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் இடங்களில் இருவரும் பிரச்சாரத்தை தொடங்குவார்கள் என சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பதால் பிரச்சார வாகனங்களில் ராகுல், பிரியங்கா காந்தி மற்றும் அகிலேஷ் யாதவின் மனைவியும் சமாஜ்வாடி எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் ஆகியோரது புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.