Press "Enter" to skip to content

கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகல்

கர்நாடகா மாநில முன்னாள் முதல் மந்திரி காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்துள்ளார்.

பெங்களூர்:

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரசில் மூத்த தலைவர்களில் ஒருவராவர். அவர், 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் அம்மாநிலத்தின் முதல்மந்திரியாக பதவி வகித்தார். அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பணியாற்றினார்.

2009-ம் ஆண்டில் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியுறவுத் துறை மந்திரியாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா பணியாற்றியுள்ளார். மேலும், இந்திரா காந்தி மற்றூம் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையிலும் பணியாற்றியுள்ளார்.

தற்போது, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா திடீரென கட்சியிலிருந்து விலகியுள்ளார். மேலும், தனது கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.