கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தேனி அருகே கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் சுந்தர் தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் பாட்டுக்கேட்டுள்ளார். அப்போது, அந்த வழியே சென்ற கண்ணன் என்பவர், ஏன் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளாய் எனக்கேட்டு சுந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மோதல் முற்றியதால், கண்ணன் தான் வைத்திருந்த அரிவாளால் சுந்தரின் தலையில் வெட்டினார். 

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுந்தரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கண்ணன் தலைமறைவாகவுள்ளார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai