“நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன்” எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த கீழ் மகன் (ரவுடி) 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உதவி ஆய்வாளரை கீழ் மகன் (ரவுடி) மிரட்டும் ஒலிநாடா வாட்ஸ்அப்பில் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் இசக்கி ராஜா. இவர் சில மாதங்களுக்கு முன்பு கீழ் மகன் (ரவுடி)களுக்கு எதிராக எச்சரிக்கை செய்து வெளியிட்ட ஒலிநாடா சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டது. 

இந்நிலையில், கீழ் மகன் (ரவுடி) மாடசாமி என்பவர் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவை மிரட்டும் ஒலிநாடா வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. அதில் கீழ் மகன் (ரவுடி) மாடசாமி பேசுகையில், “இன்னைக்கு எஸ்.ஐ. ஆனதும் பெரிய ஆளாக ஆக முடியாது. நான் பாரக்கொட்டை மாடசாமி பேசுறேன். என் பட்ட பெயர் உனக்கு தெரியும். உன்னுடைய அப்பாவை 1998ல் வெட்டினேன். என் காலை வெட்டுவேன் என்று என் அண்ணனிடம் சொல்லியிருக்க. உன் கற்பனையில் கூட நினைக்காத. நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன். நீ இருக்க நிலையை பார்த்து விடுறேன். நீ போட்டிருக்க டிரெஸ்க்காக” என மிரட்டியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai