வயதான தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்

சென்னையில் வயதான தாயை, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மகனும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகரைச் சேர்ந்த எத்திராஜ் என்பவர், மனைவியை பிரிந்த நிலையில் தமது தாய் வீட்டில் வசித்து வந்தார். 70 வயதான சரஸ்வதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, எத்திராஜ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது தாய் சரஸ்வதியின் கழுத்தை அறுத்து கொலை செய்த எத்திராஜ், அதே கத்தியால் தானும் வயிற்றுப் பகுதியில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ‌உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எத்திராஜை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மூதாட்டி சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai