காதலை கைவிட மறுத்த மகள் ! ஆற்றில் தள்ளிவிட்ட பெற்றோர்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காதலை கைவிட மறுத்த மகளை ஆற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஊத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜா – கவிதா தம்பதியின் மகள் விவிதா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். அம்மபாட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரை விவிதா காதலித்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் கல்லூரியில் இருந்து விவிதாவை அழைத்துச் சென்ற பெற்றோர் காதலை கைவிடும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. அவர் மறுக்கவே சின்னமனூர் அருகே விவிதாவை ஆற்றில் தள்ளியுள்ளனர். அவ்வழியே ரோந்து சென்ற காவல்துறையினர் விவிதாவை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விவிதாவின் பெற்றோரை கைது செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai