சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி – மேளதாளங்களுடன் வரவேற்பு

சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி – மேளதாளங்களுடன் வரவேற்பு

சீன அதிபர் ஸி ஜின்பிங் உடன் மாமல்லபுரத்தில் பேச்சு நடத்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். 

சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பையொட்டி சென்னை புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். மோடியை ஆளுநர் பல்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் சால்வை அணிவித்து ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் பிரேமலதா, ஜி.கே. வாசன் உள்ளிடோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர். 

இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடிக்கு செண்டைமேள தாளங்கள் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி உலங்கூர்தி மூலம் கோவளம் புறப்பட்டார். திருவிடத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து காரில் கோவளம் செல்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh