மனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்..!

மனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்..!

மனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் காராப்பாடி. இக்கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன். வயது 22. கட்டிட தொழிலாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். புவனேஸ்வரன் மனைவியின் தங்கையான செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பள்ளியின் கோடை விடுமுறைக்காக மே மாதம் தனது அக்காவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மனைவியின் தங்கை என்றும் பாராமல் புவனேஸ்வரன், செல்வியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. செல்வி சுமார் 10 நாட்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் புவனேஸ்வரன். பின்னர் கோடை விடுமுறை முடிந்து அங்குள்ள பள்ளிக்கு வழக்கம்போல பன்னிரெண்டாம் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்துவிட்டார் செல்வி. விடுதியில் தங்கியிருந்த செல்விக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்படவே அதனை கவனித்த விடுதிக் காப்பாளர் செல்வியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போதுதான் செல்வி நான்கரை மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தன் அக்காவின் கணவர்தான் இந்த நிலைமைக்கு காரணம் என செல்வி கூறியுள்ளார்.

இதனையடுத்து செல்வியின் அம்மா இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி புவனேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh