Press "Enter" to skip to content

கடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி!

மாமல்லபுரத்தில் நடைபயிற்சி சென்ற பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, தூய்மை பணியில் ஈடுபட்டார்.

கோவளம் ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடி, இன்று காலை நடைபயிற்சி சென்றார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளை கைகளால் அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். 

 

பின்னர் இதுபற்றி ட்வீட் செய்துள்ள பிரதமர், பொது இடங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள உறுதியேற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Plogging at a beach in Mamallapuram this morning. It lasted for over 30 minutes.

Also handed over my ‘collection’ to Jeyaraj, who is a part of the hotel staff.

Let us ensure our public places are clean and tidy!

Let us also ensure we remain fit and healthy. pic.twitter.com/qBHLTxtM9y
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.