ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

சென்னை அருகே கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த அன்னனூர், சிவசக்தி நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. (வயது 68) கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சுப்பம்மாள்(60) இவர்களுக்கு நாகராஜ்(35), ரவி(30) என்ற இரண்டு மகன்களும், கல்யாணி (28) என்ற மகளும் உள்ளனர். கல்யாணிக்கு திருமணம் ஆகி மேலாய்வுஷ்வரி, யோகேஷ்வரி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கோவிந்தசாமி, அவரது மனைவி, இரண்டு மகன்கள், மகள் கல்யாணி, அவரின் இரண்டு குழந்தைகள் என அனைவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் கேவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்யாணி மற்றும் அவரது மகள்கள் 2 பேரும் கே.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்வவம் குறித்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கோவிந்தசாமி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நுவகரான் என்ற பூச்சி மருந்து குடித்து இருப்பதும் கடன்  பிரச்சனை காரணமாக தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – +91 44 2464 0050,   +91 44 2464 0060)Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh